எசேக்கியேல் 48

01 கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார்ஏனானுக்கும் ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும்,

02 தாணின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும்,

03 ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும்,

04 நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும்,

05 மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,

06 எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும்,

07 ரூபனின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக.

08 யூதாவின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; அது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.

09 இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.

10 வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.

11 இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.

12 அப்படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.

13 ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.

14 அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

15 இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக.

16 அதின் அளவுகளாவன: வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறுகோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம்.

17 நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும் தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக.

18 பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக.

19 இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.

20 அர்ப்பிதநிலமனைத்தும் இருபத்தையாயிரங்கோல் நீளமும், இருபத்தையாயிரங்கோல் அகலமுமாய் இருக்கக்கடவது; பட்டணத்தின் காணி உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலம் சதுரமாய் இருக்கவேண்டும்.

21 பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரானாது அதிபதியினுடைதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.

22 அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது.

23 மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும்,

24 பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும்,

25 சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும்,

26 இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும்,

27 செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக.

28 காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார் துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் போகும்.

29 சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

30 நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.

31 நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒருவாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

32 கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒருவாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

33 தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல் இசக்காருக்கு ஒருவாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

34 மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒருவாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

35 சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.


இந்த வலைப்பக்கத்தை இதிலிருந்து அணுகலாம்
https://www.bibletamil.in/எசேக்கியேல்-48
https://www.bibletamil.in/ezekiel-48